முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது: சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
Bus-2022-05-05

தமிழகத்தில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

மானியக்கோரிக்கை... 

சட்டசபையில் நேற்று போக்குவரத்துத் துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று முடிந்தபிறகு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,வரும் 12-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க இனி அனுமதிக்கப்படுவார்கள். (தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது).

தானியங்கி பயணச்சீட்டு...

மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதைத் தடுப்பதற்கு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற்றுநோயாளிகள் பயணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். பள்ளி, வாகனங்களுக்கு முன், பின்புறங்களில் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்த ஏதுவாக சிறப்பு மோட்டார் வாகன விதிகள் உருவாக்கப்படும். தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். விழா நாட்களைத் தவிர இதர நாட்களில் இணைய வழி வாயிலாக இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். 

நடமாடும் பணிமனைகள்...

சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதப்படும். அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும், பராமரிப்பதற்காகவும் அரசு நடமாடும் பணிமனைகளை உருவாக்கப்படும். அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைக்கப்படும். பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை காட்சிப்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சுமைப் பெட்டிகளை வாடகைக்கு விடப்படும் போன்ற அறிவிப்புகள் அவர் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து