முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்களுடன் பேட்டிங் செய்ய முடியாது: வைரலான கோலியிடம் மேக்ஸ்வெல் கூறும் வீடியோ

வியாழக்கிழமை, 5 மே 2022      விளையாட்டு
kozhi-2022-05-05

Source: provided

மும்பை: உங்களுடன் பேட்டிங் செய்ய முடியாது என்று கோலியிடம் மேக்ஸ்வெல் கூறும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

டோனியிடம்... 

15வது ஐபிஎல் சீசனில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு -  சென்னை அணிகள் மோதின . இந்த போட்டியில் சென்னை அணியை 13  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் 9-வது ஓவரில் விராட் கோலி கவர்ஸ் திசையில் இருந்த ராபின் உத்தப்பா-விடம் பந்தை அடித்துவிட்டு ஓட, அந்த பந்தை வேகமா உத்தப்பா கீப்பர் டோனியிடம் எறிந்தார். 

மிக வேகமாக... 

பிடித்த வேகத்தில் பந்தை ஸ்டம்பில் தோனி அடிக்க, ஸ்ட்ரைக்கர் திசை நோக்கி ஓடி வந்த மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு ஓய்வறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கோலியிடம் பேசும் மேக்ஸ்வெல் (வீடியோவின் 2-வது நிமிடத்தில்) கூறுகையில், " என்னால் உங்களுடன் பேட்டிங் செய்ய முடியாது. நீங்கள் மிக வேகமாக ஓடுகிறீர்கள். நீங்கள் ஓடி ஒன்று, இரண்டு ரன்களை அடிக்கிறீர்கள், நான் அதை செய்வதில்லை " என்று வேடிக்கையாக கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து