முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகை செய்தி செயலாளராக முதன்முறையாக கருப்பின பெண் நியமனம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      உலகம்
Karen-Jean-Pierre 2022 05 0

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்கவின் வெள்ளை மாளிகையின் புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் செய்தி செயலாளர் உயர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த பதவியை பெரும் முதல் எல்.ஜி.பி.டி.கியூ. நபராகவும் கரீன் ஜீன்-பியர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பணியில் இருந்த ஜென் சாகிக்கு பதிலாக வரும் 13-ம் தேதி முதல் கரீன் ஜீன்-பியர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். 

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கரீன் ஜீன்-பியர்-யின் அனுபவம், திறமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாராட்டுவதாகவும், அவருடைய பணி நியமனத்தை அறிவிப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து