முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்தவரின் இதயத்தில் புதிய வைரஸ்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      உலகம்
David-Bennett 2022 05 06

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்தவரின் இதயத்தில் புதிய வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பென்னட்டுக்குப் கடந்த ஜனவரி மாதம் பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்தினர்.

மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டது. பின்னர் பன்றியின் இதயம் பொருத்திய இரண்டு மாதங்களில் டேவிட் பென்னட் காலமானார். அவரது மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அப்போது தெரிவிக்கவில்லை.  அவரது உடல் நிலை மோசம் அடைந்து அவர் இறந்தார் என்பதை மட்டும் தெரிவித்து இருந்தனர்.

இதை தொடர்ந்து டேவிட் பென்னட்டின்  இதய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்ததில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயத்திற்குள் டி.என்.ஏ. போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விலங்குகளில் இருந்து  மனிதர்களுக்கு உறுப்புகளை பொருத்துவதால் புதிய தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!