முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன்- ரஷ்ய போர் முடிவுக்கு வர வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      உலகம்
Antonio 2022 05 06

Source: provided

நியூயார்க் : உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், இது குறித்து  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷ்யா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!