முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயன்மிகு நிதி ஆளுமை மையத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
CM-1 2022 05 06

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக அரசு  மற்றும்  இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்துடன் (Centre for Effective Governance of Indian States) அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய மாநிலங்களில் பயன்மிகு ஆளுமைக்கான மையமானது (CEGIS) இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இது மாநிலங்களின் செயல்பாட்டினை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது. இந்த மையம் ஏற்கனவே சில மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இம்மையமானது, மாநில வருவாயை பெருக்குதல், அரசு கொள்முதலின் செயல் திறனை மற்றும் பணத்திற்கான மதிப்பினை மேம்படுத்துதல், மனிதவள மேலாண்மை அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பினை  ஒருங்கிணைப்பிற்கான பகுப்பாய்வு செய்தல் போன்ற பணிகளில் தமிழக அரசிற்கு உதவி புரியும்.

இந்நிகழ்வின்போது, நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, துணைச்செயலாளர் (பட்ஜெட்) சிபி ஆதித்யா செந்தில்குமார், துணைச் செயலாளர் பிரத்திக் தயாள், இந்திய மாநிலங்களின் பயன்மிகு  ஆளுமைக்கான மையத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆஷிஷ் தவான், தலைவர் டாக்டர் விஜய் பிங்களே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து