முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக மேலும் 4 காவலர்கள் கைது : சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
Vighnesh 2022 05 07

Source: provided

சென்னை : விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி கைது செய்திருந்த நிலையில் மேலும் 4 காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் கடந்த 19 ஆம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் விசாரணைக் கைதி விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்திட சி.பி.சி.ஐ.டிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (மே 6) உத்தரவிட்டார். இதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து அன்றே விசாரணையைத் தொடங்கினர். மேலும், அதன் நீட்சியாக நேற்று முன்தினம் 9 காவலர்களிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேரை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் கைது செய்தனர். தலைமைச் செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் 4 காவலர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலைய எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ் ஏற்கனவே கைதான நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் காலை முதல் காவலர்களிடம் விசாரணை நடந்த நிலையில், சிபிசிஐடி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து