முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்களுக்கு அரை மணி நேரம் தூங்க அனுமதி கொடுத்த நிறுவனம்

சனிக்கிழமை, 7 மே 2022      இந்தியா
sleep-2022-05-07

பெங்களூரை சேர்ந்த நிறவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்கு அரை மணி நேரம் தூங்க அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் ஞாபக சக்தி, படைப்பாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ‘வேக் பிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 நிமிடம் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது. இதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கிகொள்ளலாம். இதற்காக வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சைதன்யா ராமலிங்ககெளடா கூறியதாவது., மதிய நேரத்தில் தூங்குவது நமது ஞாபக சக்தி, படைப்பாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றில் 26 நிமிட தூக்கம் நமது உழைப்பாற்றலை 33 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகிறது. ஹார்வேர்ட் ஆய்வு ஒன்று மதிய தூக்கம் நமக்கு ஏற்படும் சோர்வை தடுப்பதாக கூறுகிறது. இதனால் அனைவருக்கும் தூங்கும் இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து