முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சி பொறுப்பில் ஓராண்டு நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
RN-Ravi 2022 01 04

ஆட்சி பொறுப்பில் ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்து, நேற்று 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த ஓராண்டில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். முதல்-அமைச்சராக ஆட்சி பொறுப்பில் முதல் ஆண்டை நிறைவு செய்த மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவியும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், "ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவி தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!