முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 41 சதவீத பெண்கள் உடல் பருமனால் பாதிப்பு : தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்

சனிக்கிழமை, 7 மே 2022      இந்தியா
Lady 2022 05 07

இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அதில் பெண்கள் எண்ணிக்கையே அதிகம் என்று தேசிய குடும்பநலத் துறை ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கையில் கடந்த 4 ஆண்டுகளில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19ல் இருந்து 23 % ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 21ல் இருந்து 24 % ஆக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 41 % பெண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் பெண்களில் கருவுறுதல் விகிதம் 2.2ல் இருந்து 2.0 ஆக குறைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது

இதனிடையே அதிகபட்ச கருவுறுதல் விகிதமாக 2.98 என்ற நிலை பீகாரில் இருக்கிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை 38ல் இருந்து 36% ஆக குறைந்துள்ளது. வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக மேகாலயாவில் 47% மும் குறைந்தபட்சமாக புதுச்சேரியில் 20%மும் உள்ளது. திருமண வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யும் வழக்கம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது. நாட்டில் வங்கி அல்லது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் பெண்களின் விகிதம் 53ல் இருந்து 79% ஆக அதிகரித்து இருப்பதாக தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து