முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 52-வது லீக் ஆட்டம்: ஜெய்ஸ்வால் அதிரடியில் பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

சனிக்கிழமை, 7 மே 2022      விளையாட்டு
Rajasthan-team 2022-05-07

Source: provided

மும்பை : ஐ.பி.எல். 52-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அதிரடியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் பேட்டிங்...

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான நேற்று 2 போட்டிகள் நடைபெற்றது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர். 

பேர்ஸ்டோ அரைசதம்... 

தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் கடந்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ராஜபக்சே 27 ரன்னிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் ஜிதேஷ் சர்மா (38) அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

190 ரன்கள் இலக்கு...

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பட்லர் 16 பந்துகளில் 30 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.  அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், படிக்கல் 31 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை அளித்த அவர், 68 ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஹெட்மையர்(31) அதிரடியுடன் விளையாடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துவைத்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும்  இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து