முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜடேஜா குறித்து வாட்ஸன் கருத்து

சனிக்கிழமை, 7 மே 2022      விளையாட்டு
Watson 2022 05 07

Source: provided

நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து 6 புள்ளிகளுடன் தரவரிசைப்பட்டியலின் 9வது இடத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு சென்னை அணி தனது பிராதன கேப்டனான டோனியை நீக்கிவிட்டு ஜடேஜாவை நியமித்தது தான் என கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்த பிறகு ஜடேஜா மீண்டும் தன் கேப்டன் பொறுப்பை டோனியிடமே தந்துவிட்டார்.

தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்த முடியாதது தான் அதற்கு காரணம் என கூறினார். இந்நிலையில் ஜடேஜா கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறித்து முன்னாள் சென்னை வீரர் ஷேன் வாட்ஸன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  ஜடேஜா குறித்து ஷேன் வாட்ஸன் கூறியதாவது:- தோல்விக்கு பிறகு அவர் பதவி விலகியது வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் சிறந்த வீரர், நுட்பம் வாய்ந்த விளையாட்டை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர். ஆனால் பொதுவில் இதுபோன்ற நிலையில் ஜடேஜாவை வைத்து பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. அவர் கேப்டன் பதவியை துறப்பதாக சொல்லியிருக்க கூடாது. ஆனால் அவர் மீண்டும் டோனிக்கு தலைமையை கொடுத்தது சரி என்று தான் தோன்றுகிறது இவ்வாறு வாட்ஸன் கூறினார்.

_____________

ஹிட் விக்கெட்டான 14-வது வீரர் சாய் சுதர்சன்

குஜராத் அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுகிறார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 14 ரன்னில் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். ஐ.பி.எல். போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆன 14வது வீரர் சாய் சுதர்சன் ஆவார். 

முஷாவிர் கோட்டே, மிஸ்பா உல்ஹக் (2008), சுவனபில் அஸ்னோகர் (2009), ரவீந்திர ஜடேஜா, சவுரப் திவாரி (2012), யுவராஜ் சிங், தீபக் ஹூடா, டேவிட் வார்னர் (2016), ஷெல்டன் ஜேக்சன் (2017), ரியான் பராக் (2019), ஹர்திக் பாண்ட்யா, ரஷீத்கான் (2021), பேர்ஸ்டோவ் (2021) ஆகியோர் இதே முறையில் அவுட் ஆகி இருந்தனர்.

______________

ஒரு அணிக்காக அதிக சிக்சர்கள்: கோலியுடன் இணைந்த ரோகித் 

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை ரோகித்சர்மா பெற்றார். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார். 

ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5வது வீரர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி, டி வில்லியர்ஸ், கிறிஸ்கெய்ல், பொல்லார்ட் ஆகியோருடன் அவர் இணைந்தார். ரோகித்சர்மா ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல்லில் 236 சிக்சர்கள் (218 ஆட்டம்) அடித்துள்ளார். அவர் டெக்கான் சார்ஜஸ் அணிக்காவும் விளையாடி இருந்தார்.

______________

கவுண்டி போட்டிகளில் அதிக சிக்சர்கள்: ஸ்டோக்ஸ் சாதனை 

இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. வொர்செஸ்டரில் நடக்கும் லீக் போட்டியில் துர்ஹாம், வொர்செஸ்டர்ஷைர் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற துர்ஹாம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துர்ஹாம் அணியின் பேட்டிங் வரிசையில் 6வது வீரராக இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். 

அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் 88 பந்தில் 17 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 161 ரன் எடுத்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் துர்ஹாம் அணி 6 விக்கெட்டுக்கு 580 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தப் போட்டியில் 17 சிக்சர் பறக்கவிட்ட ஸ்டோக்ஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரரானார். இதற்கு முன் குளோசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய சைமண்ட்ஸ், எசக்ஸ் அணிக்காக பங்கேற்ற கிரஹாம் நேப்பியர் ஆகியோர் தலா 16 சிக்சர் அடித்திருந்தது சாதனையாக இருந்தது.

________________

இந்தியாவுல மிஸ் பண்ணிடேன்: வைரலாகும் கம்மின்ஸ் டுவீட்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ். இவர் தற்போது ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவர் சமூக வலைதளமான டுவீட்டரில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், பாவ் பஜ்ஜியை ருசித்து மகிழ்ந்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறும்போது, கடந்த 11 வருடங்களாக இந்தியாவிற்குத் தான் வந்து செல்கிறேன். ஆனால் பாவ் பஜ்ஜியை சாப்பிடாமல் எப்படித் தவறவிட்டேன் என தெரியவில்லை என்று கூறி உள்ளார். பாவ் பஜ்ஜி மிகவும் ருசியாக இருந்ததாகவும் கம்மின்ஸ் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து