முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      தமிழகம்
Coimbat-Market 2022 05 07

Source: provided

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால், தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் காலிப்ளவர் கிலோ ரூ. 40 ஆகவும், முட்டைகோஸ் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கேரட் 35 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. அவரை 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 25 ரூபாய்க்கும் இஞ்சி 35 ரூபாய்க்கும், பீட்ரூட் 32 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!