முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      இந்தியா
Kashmir 2021 07 16

Source: provided

குல்காம் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சியான் தேவ்சர் பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை தொடங்கியது.

ஏறக்குறைய 6 மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த சண்டையில் குல்காமில் தேவ்சர் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் ஒருவர் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்.  அந்த பயங்கரவாதியின் பெயர் ஐதர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றொரு பயங்கரவாதி உள்ளூரை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

வடகாஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக ஐதர் செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு பயங்கரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.இதனை காஷ்மீர் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றையும் படையினர் கைப்பற்றி உள்ளனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!