முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலிண்டர் விலை உயர்வு: ராகுல்காந்தி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      இந்தியா
Rahul Gandhi  2021 11 03

Source: provided

புதுடெல்லி : ஏழைகள், நடுத்தர மக்களின் நலன் மீது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் அக்கறை இருக்கிறது என்று சிலிண்டர் விலை உயர்வை ஒப்பிட்டு ட்விட்டரில் பா.ஜ.க.வை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

2014-ல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410 மானியமாக ரூ.827க்கு வழங்கப்பட்டது. 2022ல் பா.ஜ.க ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999, மானியம் பூஜ்ஜியம் என்றளவில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் தான் ஏழை, நடுத்தர இந்தியக் குடும்பங்களில் நலனில் அக்கறை கொண்டுள்ளது. இதுதான் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!