முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு உடல்நலக்குறைவு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      இந்தியா
Fish food 2022 05 08

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் ஷவர்மா சிக்கன் உணவு பிரச்சினை இருக்கும் நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிஜு. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லறையில் ரூ.200க்கு குதிரை கானாங்கெளுத்தி மீன் வாங்கி உள்ளார். அதனை குழம்பு வைத்து குடும்பத்தினர் சாப்பிட்டனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் பிஜூவின் மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இரவில் பிஜூவின் மனைவிக்கும் வயிற்று வலி ஏற்பட்டது.

இந்த சூழலில் பிஜூ மற்றும் அவரது 2வது மகள் ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

எனவே அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை கலந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கருதினர். இந்த நிலையில் பிஜு மீன் வாங்கிய கடையில் மறுநாள் மற்றொருவர் மீன் வாங்கிய போது மீனில் இருந்து புழுக்கள் வந்துள்ளன.

எனவே பிஜு வாங்கிய மீன் சுகாதாரமற்றதாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வெஞ்சா ரம்மூடு போலீசார் மற்றும் கல்லறை கிராம அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீன் மாதிரிகளை சேகரித்தனர். ஏற்கனவே ஷவர்மா சிக்கன் உணவு பிரச்சினை இருக்கும் நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து