முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் கிரிக்கெட் 54-வது லீக் ஆட்டம்: 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழத்தி பெங்களூரு அணி அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      விளையாட்டு
Bangalore-team 2022 05 08

Source: provided

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் 54-வது லீக் ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழத்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

192 ரன்கள் குவிப்பு...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

டூபிளெசிஸ் அபாரம்...

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 48 ரன்கள், மேக்ஸ்வெல் 33 ரன்கள், தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் (நாட் ஒவுட்) எடுத்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஜகதீஷா 2 விக்கெட், கார்த்திக் தியாகி ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

193 ரன்கள் இலக்கு...

பின்னர் இறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். ராகுல் திரிபாதி அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.  மார்க்ரம், பூரணை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தோடு பெவிலியன் திரும்பினர்.

ஐதராபாத் தோல்வி...

இறுதியில் ஐதராபாத் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்  மூலம் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் விளையாடி 7 -ல் வெற்றியும் 5-ல் தோல்வியும் கண்டுள்ள பெங்களூரு அணி 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.  ஐதரபாத் அணி 5-ல் வெற்றி, 6-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 6- வது இடத்தில் உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து