முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: பெண்கள் ஒற்றையரில் அமெரிக்க வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் சாம்பியன் : அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      விளையாட்டு
Ones-Jabir 2022 05 08

Source: provided

மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி  பெண்கள் ஒற்றையரில் அமெரிக்க வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

துனிசியா வீராங்கனை...

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒன்ஸ் ஜபீர் சாம்பியன் பட்டம் வென்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா துனிசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார். 1 மணி 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி ஒன்ஸ் ஜபீர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஜோகோவிச் தோல்வி...

அரைஇறுதியில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்திய கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் 7-6 (7-5), 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதனிடையே கால்இறுதி போட்டி ஒன்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து