முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 53-வது லீக் ஆட்டம்: கொல்கத்தாவை வீழ்த்தியது லக்னோ

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      விளையாட்டு
Lucknow-team 2022 05 08

Source: provided

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் 53-வது லீக் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றிப் பெற்றது.

கொல்கத்தா பந்துவீச்சு...

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித்தொடரில் 53வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி லக்னோ அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கே.எல் ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

டி காக் அதிரடி...

மற்றொரு வீரர்  டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார். தீபக் ஹூடா 41 ரன்னும், க்ருனால் பாண்ட்யா 25 ரன்னும் அடித்தனர்.  பதோனி 15 ரன்னும், ஸ்டோய்னிஸ் 28 ரன்னும், ஹோல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.  இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 

177 ரன்கள் இலக்கு...

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து. அதிகபட்சமாக ஆன்ட்ரு ரஸ்ஸல் 45 ரன்கள் அடித்தார். ஆரன் பிஞ்ச் 14 ரன்னும், சுனில் நரேன் 22 ரன்னும் அடித்தனர். அந்த அணியின் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும்,  பிற வீரர்கள் ஒற்றை இலக்குடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

101 ரன்களுக்கு...

கொல்கத்தா அணி 14.3 ஓவர் முடிவில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் அதிபட்சமாக அவிஷ்கான் 3 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து