முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்-ல் உரிய மரியாதை இல்லை: கெயில் வருத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      விளையாட்டு
Chris-Gayle 2022 05 08

Source: provided

ஐபிஎல் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அதிரடி சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்காக விளையாடினார். 2020 ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 288 ரன்கள் எடுத்தார். 2021-இல் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125.32. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது., கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் சென்ற விதத்தைப் பார்க்கும்போது நான் சரியாக நடத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் நிறைய பங்களிப்பை அளித்தபோதும் உரிய மரியாதை கிடைக்கவில்லை. எனவே, சரி இருக்கட்டும் என ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழையாமல் இருப்பது பற்றி கவலை கொள்ளாமல் அதை அப்படியே விட்டுவிட்டேன் என்றார்.

___________________

கேப்டனாக தான் தேர்வாகதற்கு யுவராஜ் சிங் கூறும் காரணம் ?

இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்கால் வர முடியவில்லை. 2007 டி20 உலக கோப்பையில் அவருக்கு பதில் டோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சாப்பல் பதவி வகித்தபோது பல சர்ச்சைகள் வெடித்தன. அப்போது, சச்சின் சார்பாக தான் இருந்ததாகவும் எனவே, சில பிசிசிஐ அலுவலர்கள் தன்னை கேப்டனாக்குவதை விரும்பவில்லை என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.

சாப்பலின் பல முடிவுகள் இந்திய அணியின் வீரர்களுக்கு அசெளகரியத்தை அளித்தது. இப்பிரச்னையில், தான் எடுத்த முடிவுதான், கேப்டன்சி பொறுப்பு தனக்கு வராததற்கு காரணம் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு அளித்த நேர்காணலில், "நான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அப்போது கிரெக் சேப்பல் சம்பவம் நடந்தது. சேப்பல் பக்கமா அல்லது சச்சின் பக்கமா என்றாகிவிட்டது. சச்சினுக்கு ஆதரவு அளித்த ஒரே வீரர் நான்தான் என்று தெரிவித்துள்ளார்.

_______________

3-வது முறையாக முதல் பந்திலே டக் அவுட்டான விராட் கோலி..!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில்  டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஐதராபத் அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக டூ பிளசிஸ் - விராட் கோலி களமிறங்கினர். நடப்பு தொடரில் மோசமான பேட்டிங் ஃபார்ம்-யில் இருக்கும் கோலி இந்த போட்டியில் முதல் பந்திலே டக் அவுட்டாகி வெளியேறினார். ஐதராபாத் பந்துவீச்சாளர் சுசித் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன்-யிடம் கேட்ச் கொடுத்து கோலி ஆட்டமிழந்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 3-வது முறையாக அவர் கோல்டன் டக் (முதல் பந்தில் )அவுட்டாகி உள்ளார்.

_______________

ஹங்கேரி சைக்கிள் பந்தயம்: இங்கிலாந்து வீரர் வெற்றி

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில், “கைரோ டி’இட்டாலியா” சைக்கிள் பந்தயத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 9.2 கி.மீ. தூரத்திற்கான 2-வது சுற்று சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.  

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தனித்தனியாக பங்கேற்ற நிலையில், இங்கிலாந்து வீரர் சைமன் யார்ட்ஸ், பந்தய தூரத்தை 11 நிமிடங்கள் 50 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்து அசத்தினார். 

_______________

விராட் கோலி சிறந்த வீரர்: பாக்.முன்னாள் வீரர் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் பெங்களூரு அணியின் 10-வது  போட்டியில் அவர் அரைசதம் அடித்தார். நேற்றைய போட்டியில் அவர் மீண்டும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். 

கோலி குறித்து அவர் கூறுகையில், "விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் நிரூபிக்க எதுவும் இல்லை. அவர் களத்திற்கு சென்று விளையாட்டை அனுபவித்து விளையாட வேண்டும். அவர் ரன்களை எடுக்க மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். அவர் தற்போது மோசமான பேட்டிங் ஆடுவதற்கு காரணம் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால் ஐபிஎல்-லில் அதை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். மனிதர்கள் தோல்வி அடைவார்கள். ஆனால் விராட் போன்ற ஜாம்பவான்கள், தோல்விகளுக்குப் பிறகு வலுவான கம்பேக் கொடுப்பார்கள் என அக்தர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து