முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் குற்றங்களுக்கு புதின் தான் பொறுப்பு : கனடா பிரதமர் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 9 மே 2022      உலகம்
Justin-Trudeau 2022 05 09

Source: provided

கீவ் : உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷியப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை பார்வையிட்டார்.

ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் மற்றும் ரஷியப் படைகளுக்கு இடையிலான கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை  பார்வையிட்டார்.

இதன்பின் உக்ரைன் தலைவருடனான செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ கூறியதாவது:-

உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷியாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புதின் தான் பொறுப்பு என்பது தெளிவாகிறது.

நமது வெற்றிக்குப் பின், உக்ரேனிய நகரங்களின் புனரமைப்புக்கு எங்கள் நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். கனடா கீவில் மீண்டும் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து