முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 2 சாதனைகளை படைத்தார் சி.எஸ்.கே கேப்டன் டோனி

திங்கட்கிழமை, 9 மே 2022      விளையாட்டு
Tony 2022 05 09

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

6 ஆயிரம் ரன்கள்...

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி 8 பந்தில் 21 ரன் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் அவர் 6 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார். விராட்கோலிக்கு அடுத்தபடியாக டோனி 6 ஆயிரம் ரன்னை கேப்டன் பதவியில் எடுத்தார். விராட் கோலி கேப்டன் பதவியில் 6,451 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 4764 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார்.

200 கேட்ச் பிடித்தார்... 

மேலும் 20 ஓவர் போட்டிகளில் 200 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் டோனி படைத்தார். ஷர்துல் தாகூரின் கேட்சை பிடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை தொட்டார். தினேஷ் கார்த்திக் 182 கேட்ச்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து