முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 55-வது லீக் ஆட்டம்: 117 ரன்களில் டெல்லியை வீழ்த்தி சென்னை வெற்றி

திங்கட்கிழமை, 9 மே 2022      விளையாட்டு
Chennai-wins 2022 05 09

Source: provided

மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

208 ரன்கள்... 

நடப்பு ஐபிஎல் சீசனின் 55-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், பவுலிங் தேர்வு செய்தார். சென்னை அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது 208 ரன்கள் எடுத்தது சி.எஸ்.கே. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது.

டேவிட் வார்னர்... 

அந்த அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் கே.எஸ்.பரத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இரண்டாவது ஓவரில் சிமர்ஜித் சிங் வேகத்தில் விக்கெட்டை இழந்தார் பரத். இருந்தாலும் அந்த அணிக்கு பேட்டிங்கில் அசத்தி வருபவர் வார்னர். அவர் 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். இருந்தாலும் தீக்சனா வீசிய ஐந்தாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

117 ரன்களில்... 

தொடர்ந்து ரிஷப் பந்த் மற்றும் மிட்செல் மார்ஷ், ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் மார்ஷ். பின்னர் சீரான இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது டெல்லி. பந்த், ரிபல் படேல், அக்சர் படேல், பவல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் கலீல் அகமது ஆகியோர் அவுட்டாகினர். 17.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. அதன் பலனாக சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவான் கான்வே...

முன்னதாக சென்னை அணி சார்பில் டேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 110 ரன்கள் சேர்த்தனர். ருதுராஜ் 41 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து வந்த சிவம் துபே மற்றும் கான்வே, 59 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கான்வே 87 ரன்களில் அவுட்டானார். துபே, 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். ராயுடு, மொயின் அலி மற்றும் உத்தப்பா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தனர். கேப்டன் டோனி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் டேவான் கான்வே.

கொரோனா தொற்று... 

இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் இருந்தது. ஏனெனில் டெல்லி அணியில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் அந்த அணி தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதியான பிறகே போட்டி நடந்தது. இதுகுறித்து போட்டி முடிந்தது டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பேசி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து