முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் - வீராங்கனை விருதுக்கு கேசவ்-அலிசா ஹீலி தேர்வு

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      விளையாட்டு
Alyssa-2022-05-10

ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக கேசவ் மகாராஜ் மற்றும் சிறந்த வீராங்கனையாக அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த வீரர் தேர்வு...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக் காலமாக அறிவித்து வருகிறது.  அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.

கேசவ் - அலிசா...

வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர் ஓமன் பேட்டர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபாசி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.

ஐ.சி.சி அறிவிப்பு...

இந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது. சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் கேசவ் மகாராஜ்  16 விக்கெட் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதே போல் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து