முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் அகதிகளுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் சந்திப்பு

புதன்கிழமை, 11 மே 2022      உலகம்
Antonio 2022 05 11

Source: provided

மால்டோவா : உக்ரைன் நாட்டின் அண்டை நாடான மால்டோவாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த சுற்றுப் பயணத்தின் போது, ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக குடியேறியவர்களை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டர்ஸ் சந்தித்தார். மேலும், அகதிகள் வசிக்கும் வீடுகளையும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.  

அகதிகள் நெருக்கடியை சமாளிக்க மால்டோவா நாட்டிற்கு ஐ.நா. கூடுதல் ஆதரவை அளிக்கும் என்று அண்டனியோ குட்டர்ஸ், மால்டோவா நாட்டு அதிபரிடம் உறுதி அளித்தார். ஐரோப்பியாவில் உள்ள ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மால்டோவாவில், இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் அதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து