முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்தமைக்காக மத்திய அரசின் விருது பெற்ற தமிழக ஊராட்சி தலைவர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து

புதன்கிழமை, 11 மே 2022      தமிழகம்
CM-2 2022 05 11

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட  தமிழகத்தை சேர்ந்த 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.  

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கிராம, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகளைத் தேர்வு செய்து ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட  தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 

அவற்றில் மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளை திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும்,  ஊராட்சி ஒன்றியங்களான விருதுகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த மண்ணச்சநல்லூர்  ஊராட்சி   ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மண்டபம் ஊராட்சி  ஒன்றியம்,  கிராம ஊராட்சிகளான விருதுகள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி, கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த   மண்மங்கலம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த சின்னப்பட்டி கிராம ஊராட்சி, கன்னியாகுமரி மாவட்டம், இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கங்கலேரி கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி ஊராட்சி ஒன்றியத்தைச்  சார்ந்த கட்டாத்தி கிராம ஊராட்சி ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும்,  கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த துவார் கிராம ஊராட்சிக்கும்,   குழந்தைகள் நேய கிராம ஊராட்சிகான விருது நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களை முதல்வர் பாராட்டி, இது போன்று சிறப்பாக செயல்பட்டு மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்தினார். 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து