முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகி உள்ள தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 11 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம்தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.  ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூரை சேர்ந்த கார்த்தி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேலும் தான் அந்த இரண்டு வீரர்கள்.

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ஜூனியர் மற்றும் சீனியர் முகாமில் உள்ளனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு விளையாட்டு மைய விடுதி மாணவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டு காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.  ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து