முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்தினால் நடவடிக்கை : போக்குவரத்து துறை எச்சரிக்கை

புதன்கிழமை, 11 மே 2022      தமிழகம்
Bus 2022 05 03

Source: provided

சென்னை : அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து போக்குவரத்து ஆணையர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் G அல்லது அ என்ற  எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது  ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ  மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.    தமிழ்நாடு  மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K) -ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு பெற்ற  தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே ழு அல்லது அ என்ற  எழுத்துக்கள்  பயன்படுத்தப்பட வேண்டும்.

 எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற  எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது  மோட்டார் வாகன சட்டத்தின்  கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து