முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு: தமிழக கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: இலங்கை சூழலை அடுத்து மத்திய அரசு எச்சரிக்கை

புதன்கிழமை, 11 மே 2022      இந்தியா
Central-government 2021 07

இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. இதனால், பதற்றம் நிலவுகிறது. இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் வீடும் எரிக்கப்பட்டது. மேலும் ஏரளாமான வாகனங்கள், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனை அடுத்து இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.  

இந்நிலையில், இலங்கையில் வன்முறை வெடித்துள்ளதால் தமிழகத்திற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கு தமிழக காவல்துறை, இந்திய கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் போதைப்பொருள் கும்பல்களும் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய  உள்துறை எச்சரிக்கையை அடுத்து கடலோர பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படி படகு உள்ளே நுழைந்தால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து