முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுனுக்கு ரூ.472 குறைந்தது: தங்கம் விலை 3-வது நாளாக கடும் சரிவு

புதன்கிழமை, 11 மே 2022      தமிழகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று 3-வது நாளாக குறைந்துள்ளது. நேற்று முன்தின விலையை ஒப்பிடுகையில் கடும் சரிவு கண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. 

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை அடுத்தடுத்து உயர்ந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை 3-வது நாளாக நேற்றும் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59 குறைந்து ரூ.4,787-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.472 குறைந்து ரூ.38,296-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,488-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ.1.30 பைசா குறைந்து ரூ.64.80-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.64,800 ஆக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து