முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 ஆட்டங்களுக்கு முன்பே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி : குஜராத் கேப்டன் ஹர்திக் நெகிழ்ச்சி

புதன்கிழமை, 11 மே 2022      விளையாட்டு
Hardik-Pandya 2022 05 11

Source: provided

மும்பை : 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது என குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

புதுமுக அணி... 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி தனது 9-வது வெற்றியை (12 ஆட்டம்) பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. புதுமுக அணியான குஜராத், தனது முதல் போட்டி தொடரிலேயே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

பெருமையாக உள்ளது...

வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது., உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம். ஆனால் 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன்.

சாய் கிஷோர்... 

இந்த ஆட்டத்தில் எதிரணி 8 விக்கெட் இழந்து இருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன். அவர்கள் கீழே சரிந்ததால் இன்னும் தாழ்த்துவோம். அதை செய்து விட்டு போட்டிக்கு பின் ஓய்வெடுப்போம் என்று கூறினேன். இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் ஒரு தொழில்நுட்ப பந்து வீச்சாளர். அவரது உயரம், வேகம் காரணமாக விக்கெட் எடுப்பதில் கூடுதல் வாய்ப்பில் உள்ளார். வேகப்பந்து வீச்சு இருந்ததால் அவரை விளையாட வைக்க முடியவில்லை.

பெரிய மாற்றம்... 

ஆனால் இந்த ஆடுகளத்தை பார்க்கும்போது வலது கை பேட்ஸ்மேன்களுக்காக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என்று நினைத்தோம். அதன்படி சாய்கிஷோரும் சிறப்பாக செயல்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

மிக சவாலானது... 

லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, இந்த ஆடுகளம் தந்திரமானது மற்றும் சவாலானது என்பதை அறிவோம். நாங்கள் நன்றாக பந்து வீசினோம். பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். சில மோசமான ஷாட் தேர்வுகள் மற்றும் ரன் அவுட் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து சில நல்ல பாடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து