முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயல்பான கேப்டன் இல்லை: ஜடேஜா அணியன் வீரராகவே சிறப்பாக செயல்பட முடியும் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து

புதன்கிழமை, 11 மே 2022      விளையாட்டு
Ravi Shastri 2022 05 11

Source: provided

மும்பை : ஆல்ரவுண்டர் ஜடேஜா, சி.எஸ்.கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் அணியின் ஒரு வீரராக சிறப்பாக செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

டோனி விலகல்...

ஐ.பி.எல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து டோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக டோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சி.எஸ்.கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சி.எஸ்.கே வெற்றி பெற்றுள்ளது.

கூடுதல் சுமையாக... 

இந்நிலையில் கிரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் ஜடேஜா பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது., ஜடேஜா இயல்பான கேப்டன் இல்லை. இதற்கு முன்பு உள்ளூர் போட்டிகள் உள்பட எவ்வித அளவிலும் அவர் கேப்டனாகப் பதவி வகித்ததில்லை. எனவே அவருக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது கூடுதல் சுமையாகவே இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஜடேஜாவின் தலைமைப் பண்பு குறித்து மதிப்பிட மக்கள் விரும்புவார்கள். ஆனால் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது அவருடைய தவறல்ல. 

சிறந்த வீரராகவே...

அவர் எப்போதும் கேப்டனாக இருந்ததில்லை. தண்ணீருக்கு வெளியே மீன் இருந்தது போலவே அப்பதவிக்குத் தொடர்பில்லாமல் இருந்தார். அதைவிடவும் ஒரு வீரராக அவரால் சிறப்பாகச் செயலாற்ற முடியும். சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். எனவே அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவேண்டும். அவரை கேப்டனாக்கியதால் சி.எஸ்.கே சில ஆட்டங்களை இழந்தது. இப்போது அவர்கள் விளையாடியதைப் போல முன்பே விளையாடியிருந்தால் புள்ளிகள் பட்டியலில் முன்னணியில் இருந்திருப்பார்கள் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து