முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 மே 2022      இந்தியா
Election-commission-2022-05-12

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கு ஜூன் 10ல் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களிலும் 57 உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜூன் 29ல் நிறைவு... 

தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., எம்.பி.,க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்ட 6 எம்.,பி.,க்கள் மற்றும் 14 மாநிலங்களில் இருந்து தேர்வான 51 எம்.பி.,க்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் நிறைவு பெறுகிறது.

முன்கூட்டியே... 

ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை ஒரு மாதம் முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், 57 இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் மே 31 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

15 மாநிலங்களில்...

உத்தரப்பிரதேசத்தில் 11 இடங்கள் மகாராஷ்டிரம், தமிழகத்தில் தலா ஆறு இடங்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஒடிசா பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், பிகார், ஜார்கண்ட், ஹரியாணா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பா.ஜ.கவின் பலம்... 

கடந்த மாதம் நடத்தப்பட்ட மாநிலங்களவை தேர்தலை தொடர்ந்து பாஜக 100 உறுப்பினர்களை பெற்று வரலாறு படைத்தது. 1990க்கு பிறகு எந்த ஒரு கட்சியும்  மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களை பெற்றதில்லை.  கடந்த மாதம் திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அங்குள்ள தலா ஒரு இடத்தை பாஜக பெற்றது. இதன் காரணமாக, பாஜகவின் பலம் 101 ஆக உயர்ந்தது. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 123 பேரின் ஆதரவு தேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து