முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை: கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 12 மே 2022      உலகம்
Jail-2022-05-12

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் சில நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டாலும், அவர்களது விசை ப்படகுகளை திருப்பி கொடுப்பதில்லை.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24ந் தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த 12 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். பின்பு அவர்கள் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களது நீதிமன்ற காவல் முடிந்து விட்டதால் கிளிநொச்சி நீதி மன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த 12 மீனவர்களும் இதற்கு முன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது ரூ. 1 கோடி செலுத்தினால் தான் ஜாமீனில் விட முடியும் என்ற நீதிபதியின் கருத்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது. இந்தநிலையில் அந்த மீனவர்கள் 12 பேரையும் தற்போது விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தர விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து