முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பலி 9 ஆக குறைந்தது: இந்தியாவில் 2,841 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      இந்தியா
India-Corona 2022 01 12

இந்தியாவில் புதிதாக 2,841 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனா தினசரி பலி 9 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது. அதேநேரம் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3,295 பேர் அதன் பிடியில் இருந்து மீண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 1,032, கேரளாவில் 413, அரியானாவில் 354, மகாராஷ்டிராவில் 231, உத்தரபிரதேசத்தில் 204, கர்நாடகாவில் 157 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 16 ஆயிரத்து 254 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்பால் பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 54 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் 24 ஆக குறைந்த நிலையில், நேற்று 9 ஆக சரிந்துள்ளது. இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலின்படி 8 மரணங்கள் அடங்கும். இதுதவிர மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,24,190 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இதுவரை 190 கோடியே 99 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் 14,03,220 டோஸ்கள் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 84.29 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து