முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா : எல்லைகளை கண்காணிக்க அதிபர் கிம் உத்தரவு

சனிக்கிழமை, 14 மே 2022      உலகம்
KIM 2022-05-14

Source: provided

பியாங்கியாங் : வடகொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா  தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும் என்று அதன் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.  ஒன்று கூட்டிய  அவசர கூட்டத்தில் கொரோனா வைரஸ் தோற்றுக்கு எதிராக ஒரு முழுமையான போருக்கு அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது.

சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியானதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாகத்தான் இவர்கள் உயிரிழந்தார்களா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. அனைத்து மரணங்களையும் காய்ச்சல் மரணங்கள் எனப் பதிவு செய்துள்ளது.  கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்றும் சீனா வழியாகவே வைரஸ் பரவியுள்ளது என்றும் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அதிபர் கிம், கொரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட உத்தரவிட்டுள்ளார். மேலும் நாட்டின் எல்லைகளிலும் வான்வழி மற்றும் கடல்வழி முனையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து