முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சிவாஜி கணேசன், அம்பேத்கர் மணிமண்டபங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 8 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை நிறுவி 21.07.2006 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

வழக்கின் காரணமாக அச்சிலை அகற்றப்பட்டு பின்னர் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை, சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் சிலையை நிறுவுவதற்கான இடத்தினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் 14.4.2022 அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை மணிமண்டபத்தில் நிறுவுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து