முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் சைக்கிள் வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : விரைவில் 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 3 மாத காலத்திற்குள் சைக்கிள்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி (ITI) பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள்  கொள்முதல் செய்ய 03.03.2022 அன்று ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். 

ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!