முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் தொன்மை மாறமால் புனரமைக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
Sekarbabu 2022 05 10

Source: provided

சென்னை : 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் தொன்மை மாறமால் புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர்- அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் திருக்கோயில்,  பழவேற்காடு, அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருப்பாலைவனம், அருள்மிகு லோகாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்குப்பின் அமைச்சர் கூறியதாவது, மீஞ்சூர்- அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் திருக்கோயில் ,இத்திருக்கோயில் சோழர் கால கட்டடக்கலையைச் சேர்ந்தது, நன்செய், புன்செய் நிலம்  என மொத்தம் 192.61 ஏக்கர் பரப்பளவை கொண்டது, 57 கற்சிலா  விக்கிரங்களும், 24 உற்சவ விக்கிரங்களும் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள மடப்பள்ளி, நந்தவனம், ராஜகோபுரம், நவகிரக கோயில் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேம்படுத்தப்படும். பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில் இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் தொன்மையானது, ஒரு கால பூஜைத் திட்டம் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது, புன்செய் நிலம் 1.20 ஏக்கர் பரப்பபளவை கொண்டது, 22 கற்சிலா  விக்கிரங்களும், 8 உற்சவ விக்கிரங்களும் உள்ளது. இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 40 வருடங்களுக்கு மேலாகின்றது.

இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில் திருப்பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.  தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்வதற்கு ஸ்தபதி ஆய்வறிக்கைப் பெற்று செயல்படுத்துதல், திருக்கோயில் நிலத்தினை  குத்தகைக்கு விட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேம்படுத்தப்படும். திருப்பாலைவனம், அருள்மிகு லோகாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் திருக்கோயிலில் தொன்மை மாறமால் திருப்பணி வெகுவிரைவில் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்ய நடவடிக்கை எடுத்தல், பராமரிப்பு பணிகள் செய்தல், சிலைகள் பாதுகாப்பு அறை கட்டுதல் போன்ற பணிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து