முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் மே 21-ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாள் : மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

சனிக்கிழமை, 14 மே 2022      இந்தியா
Amit-Shah 2022 05 14

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 21-ம் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசு துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

‘உடனடியாக’ என குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும். இதன் நோக்கம் நம் இளையர்களை பயங்கரவாதம் மற்றும் வன்முறையில் இருந்து அந்நியப்படுத்துவதே ஆகும். பயங்கரவாதத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், அது எப்படி தேச நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் விளக்கி கூற வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும். டிஜிட்டல் முறையில் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த உரையாடலை நாம் மேற்கொள்ள வேண்டும். மே 21-ஆம் தேதி சனிக்கிழமை வருவதால் பெரும்பாலான மத்திய அரசு அலுவலங்கள் விடுமுறையில் இருக்கும். அவர்கள் மே 20-ஆம் தேதி உறுதி மொழி எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து