முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் இன்று இந்தியா - ஜப்பான் மோதல்

சனிக்கிழமை, 14 மே 2022      விளையாட்டு
India-Japan 2022-05-14

14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. 73 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

மலேசியாவை...

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.  இதில், ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் கடந்த 3 தினங்களுக்கு முன் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

வெள்ளி பதக்கம்... 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் இரட்டையர் பிரிவில் உலக தர வரிசையில் 8வது இடம் வகிக்கும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்ற வெற்றியால் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

பிரணாய் வெற்றி...

இதனால், இந்தியாவின் பிரணாய் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அவர் உலக தரவரிசையில் 13வது இடம் வகிக்கும் ராஸ்மஸ் கெம்கேவை எதிர்த்து விளையாடினார். அவருக்கு போட்டியின்போது காயம் ஏற்பட்டது, இருப்பினும் தொடர்ந்து விளையாடிய பிரணாய், 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

வெள்ளி பதக்கம்... 

இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.

வரலாறு படைக்க உதவிய பிரணாய்

இந்தியாவின் 29 வயது வீரரான எச்.எஸ். பிரணாய் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அவர் உலக தரவரிசையில் 13வது இடம் வகிக்கும் ராஸ்மஸ் கெம்கேவை எதிர்த்து விளையாடினார். அவருக்கு போட்டியின் ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டது.  எனினும், வலியுடன் விளையாடிய பிரணாய், 13-21, 21-9, 21-12 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இறுதி போட்டிக்கான வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் பிரணாயின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  போட்டியில், டென்னிஸ் கோர்ட்டின் முன்பகுதியில் விழுந்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. எனினும், மருத்துவ சிகிச்சைக்கான காலஅளவு எடுத்து கொள்ளப்பட்டது.  அதில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து பிரணாய் வலியுடனேயே மீண்டும் விளையாட சென்றது  73 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!