முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் போட்டி: 18 குழுக்களை நியமனம் செய்தது தமிழக அரசு

சனிக்கிழமை, 14 மே 2022      விளையாட்டு
Tamil-Nadu-Assembly-2022-01-22

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 18 குழுக்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

ஜூலை 28 முதல்...

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள்.

வரவேற்க குழு...

இந்த நிலையில் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு., செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர் வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கனை வரவேற்க வரவேற்பு குழு சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்க தனிக்குழு என மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நிறைவு விழா...

இந்த குழுக்களின் தலைவர்களாக சம்மபந்தப்பட்ட துறைகளை சேர்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வரவேற்பு குழுவுக்கு டி.ஜெகநாதனும், போக்குவரத்துக்கு கே.கோபாலும், ஸ்பான்சர் ஷிப்புக்கு எஸ்.கிருஷ்ணனும், தொடக்க மற்றும் நிறைவு விழா குழுவுக்கு டி.கார்த்திகேயனும், சாலை, குடிநீர் சப்ளை, தூய்மை பணிக்கு சிவ்தாஸ் மீனாவும், விருந்தோம்பல் நிகழ்ச்சி மேலாண்மை, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவற்றின் குழுவுக்கு பி.சந்திரமோகனும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குழு உறுப்பினர்கள்...

ஊடகம், விளம்பரத்துக்கு வி.பி.ஜெயசீலனும், பாதுகாப்புக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபுவும், தங்குமிடம், உணவுக்கு குமார் ஜெயந்தும், சுகாதாரம், மருத்துவ பணிக்கு பி.செந்தில்குமாரும், அரங்கு ஏற்பாடுக்கு தயாளந்த் கட்டாரியாவும், நிதி, டெண்டருக்கு பிரசாந்த் வாட்நேரையும், மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானியும், சாலை மேம்பாட்டுக்கு தீரஜ்குமாரும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கான குழுவுக்கு காகர்லா உஷாவும், சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு ஆர்.ஆனந்த குமாரும், செஸ் ஒலிம்பியாட் கட்டுப்பாட்டு அறைக்கு ஏ.கே.கமல்கிஷோரும், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு நீரஜ் மித்தலும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து