முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா புதிய முதல்வரா மாணிக் சஹா பதவியேற்பு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      உலகம்
Manik-Saha 2022 05 15

Source: provided

அகர்தலா : திரிபுரா பா.ஜ.க. தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மாணிக் சஹா புதிய முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வராக பிப்லப் குமார் தேவ் பதவி வகித்து வந்தார். திரிபுராவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லவ் குமாா் தேவ் மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டது. பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணாமுல் காங்கிரசிலும் இணைந்தனர். இதையடுத்து பா.ஜ.க. மேலிட உத்தரவின் பேரில் அவர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய தலைநகர் அகர்தாலாவில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டார். நேற்று அவர் புதிய முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அகர்தலாவில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. திரிபுரா மாநில தலைவரான மாணிக் சஹா தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவுள்ளார். 67 வயதான பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் திரிபுராவின் ஒரே மாநிலங்களவை எம்.பி.யாக பா.ஜ.க. சார்பில் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுரா மருத்துவக் கல்லூரி மற்றும் அகர்தலாவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் நினைவு போதனா மருத்துவமனையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் சஹா, 2016-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தார். திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் அவர் உள்ளார்.  மாணிக் சஹா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க. மாநில தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், திரிபுரா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

திரிபுராவின் முதல்வராக பதவியேற்றுள்ள மாணிக் சாஹாவுக்கு வாழ்த்துகள். பயனுள்ள பதவிக்காலம் அமைய அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ல் தொடங்கிய திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் மேலும் வீரியம் சேர்ப்பார் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து