முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, காசிமேடு சந்தையில் மீன்களின் விலை அதிகரிப்பு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Kasimedu-Market 2022 05 15

Source: provided

சென்னை : ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரிய விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குறைந்த அளவு தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகுகளில் மட்டுமே கடலுக்கு சென்று மீனவர்கள் மீன்களை பிடித்து வந்தனர். 

மேலும் மீன்பிடி தடை காலம் என்பதால் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அசானிப்புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லாததால் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது. 

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவு கூடினர். மேலும் அசைவப் பிரியர்களும் காசிமேடுக்கு மீன்களை வாங்க திரண்டனர்.  இதனையடுத்து மீன் வரத்து குறைவு காரணமாக மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் விலை இரு மடங்காக விற்பனை செய்யப்பட்டது. 

காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை வஞ்சிரம் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.1200 ஆக விற்பனை செய்யப்பட்டது. பெரிய வகை வஞ்சிரம் 1,100 ரூபாய்க்கு விற்கப்பட்டவை 2500 வரை விற்கப்பட்டது.   மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைக்காலம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உயர்ந்துள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து