முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டான் விமர்சனம்

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
Don-review 2022 05 16

Source: provided

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சூரி சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘டான்’. மேலும் இப்படத்தில் ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கதை, சிவகார்த்திகேயனின் தந்தை சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனை மிகுந்த கண்டிப்பாக வளர்க்கிறார். சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து படிக்கிறார். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் எஸ்.ஜே.சூர்யா தடுக்கிறார். இதெயெல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக நடனம் மற்றும் பள்ளி பருவ காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகான நடிப்பை கொடுத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கல்லூரியில் காமெடி கலாட்டாவிற்கு சிவாங்கி, பால சரவணன், ஆர்ஜே விஜய் என அனைவரும் ஸ்கோர் செய்கின்றனர். மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம் என உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்க வைத்திருக்கிறார். அனிருத் வழக்கம்போல பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.‘டாக்டர்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!