முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னித்தீவு இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
Varalakshmi 2022 05 16

Source: provided

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி, தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோர் மற்றும் படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர். இயக்குனர், தயாரிப்பாளர் தியாகராஜன் பேசும்போது, படத்தின் தலைப்பிலேயே இயக்குனர் வெற்றியடைந்து விட்டார். அனைவரையும் ஈர்க்கும் பெயரை கொண்ட கன்னித்தீவு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார். இயக்குனர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, திரையரங்கம் நிலைக்க வேண்டுமென்றால் சிறிய படங்கள் அதிகம் வர வேண்டும். அந்த திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும். கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் வெற்றியடைந்துள்ளது, புது இயக்குனர்கள் கதைகளை மையப்படுத்தி திரைப்படம் இயக்குங்கள். இது என்னுடைய வேண்டுகோள்’ என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து