முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு : சுனில் கவாஸ்கர் கணிப்பு

திங்கட்கிழமை, 16 மே 2022      விளையாட்டு
Gavaskar-2022-04-29

Source: provided

மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கேப்டன்...

ஐ.பி.எல் 15-வது சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, நடப்பு சாம்பியனான சென்னை அணி 13 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. இந்த சீசனின் தொடக்கத்தில் அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா-விடம் கொடுத்த டோனி அணியின் தொடர் தோல்வி காரணமாக மீண்டும் கேப்டன் பொறுப்பை எடுத்து கொண்டார்.

தொடர வாய்ப்பு... 

இந்த நிலையில் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். டோனி குறித்து அவர் கூறுகையில், "நாம் மீண்டும் டோனியை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அணியில் அவரை ஒரு வீரராக தொடர்ந்து பார்ப்போமா அல்லது வேறு பொறுப்புகளில் பார்ப்போமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வழிகாட்டியாக... 

ஆனால் இனி வரும் காலங்களில் அணியில் அவர் ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு அணியில் தொடர்வதில் விருப்பம் இல்லை என்றால் அவர் மீண்டும் கேப்டன் பதவியை திரும்பப் பெற்றிருக்க மாட்டார் " என கவாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து