முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறமையான மாணவர்களை உருவாக்கவே தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் : தனியார் பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
CM-2 2022-05-17

Source: provided

செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே  நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது, 

இந்த அரசு உயர்கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. உயர்கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தை தாண்டி தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இதற்கு பல காரணிகள் உண்டு. இருந்தாலும், தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் ஆராய்ச்சித் துறைகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது.

உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே  நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.   உயர்கல்விக்கு  பொற்காலத்தை இந்த அரசு அளிக்கும்.   நம் மாணவர்களை உயர்கல்வியில் சிறந்த மாணவர்களாக ஆக்குவோம்.   இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!