முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை: சாலை மார்க்கமாக உதகைக்கு சென்றார் துணை ஜனாதிபதி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Venkaiah-Naidu 2022-05-17

Source: provided

கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அபுதாபியில் இருந்து மனைவியுடன் சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் (மே 16-ம் தேதி) மதியம் வந்தார். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால், ஹெலிகாப்டரில் செல்வதற்கு வானிலை ஒத்துழைக்கவில்லை.

மேலும், உதகையில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் சாலை வழிப் பயணமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் நேற்று முன்தினம் இரவு தங்கினார்.

இந்நிலையில், நேற்று (மே 17-ம் தேதி) காலை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக உதகைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வானிலை ஒத்துழைக்காததால் ஹெலிகாப்டர் பயணம் நேற்று காலை மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7.05 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் அவிநாசி சாலை, சிட்ரா, காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக உதகைக்கு புறப்பட்டுச் சென்றார். குடியரசு துணைத் தலைவர் செல்லும் வழி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடியரசு துணைத் தலைவர் வரும் 20-ம் தேதி வரை அவர் உதகையில் தங்கியிருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து