முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கண்காணிப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம்

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
CM-1 2022 05 18

Source: provided

சென்னை : மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும்   41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான முதல் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  

இக்கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,  பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும், திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.  மேலும், பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடுதல் நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த நிதியாண்டில் (2022-2023) நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், இரவீந்திரநாத்குமார், நவாஸ்கனி, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் என்.எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து